இது நடுகல் மாவட்டம் தமிழகத்திலேயே மிக அதிக நடுகற்களை கொண்ட ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி கண்டிப்பாக இருக்கும்.நடுகற்களின் வரலாறு நெடியது அந்த வகையில் நாடுகளின் வகைகள் நடுகற்களில் அத்தனை வகைகளும் கிருஷ்ணகிரியில் உண்டு ஆயிரம் ஆண்டு முதல் 250 ஆண்டுகள் வரையிலான நடுகற்கள் நம்முடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகின்றன. நமது மாவட்டத்தின் வீரம் . கலை பண்பாடு , வாழ்வியல் முறைகள் ஆகியவற்றினை நமக்கு சொல்கின்றன . இதில் கல்வெட்டுடன் கூடிய நடுகற்களும் உண்டு அவை அப்பகுதியை ஆண்டவர்கள் மற்றும் நடுகல் பற்றிய விவரங்களை கூறும்
படம் -3
கி.பி 13ம் நூற்றாண்டு நடுகல் 7 அப்பகுதியில் உள்ளன . அவை அந்த இடத்தில் மார்கழி மாதம் 27ஆம் தேதி புதுபற்று நாட்டு தொகரப்பள்ளியில் அதியமான் படைஎடுப்பின் போது இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டது
படம் -4
ஊத்தங்கரை வட்டம் அங்குத்தி ஜூனைக்கு செல்லும் வழியில் சாலையின் வலப்புறம் நடப்பட்டுள்ளது. மக்கள் வழிபடுகின்றனர் காலம்: சுமார் கி.பி.8ம் நூற்றாண்டு .1200 வருட பழமையானது.
நுளம்பன் மகன் சிவமாறன் ஊரழித்தபோது போயைய்யன் மகன் துட்டப்பன் இறந்துள்ளான். இவனது தம்பி முளித்தயன் கல் எடுப்பித்துள்ளான். இதுதான் கல்வெட்டு செய்தி
படம் -5
காவேரிப்பட்டிணம் பணகமுட்லு வட்டெழுத்து நடுகல்"ஒரு வீரன் போரில் இருவரை கொன்று தானும் இறந்த" செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது.
படம் -6
பாம்பு குத்திபட்டான் நடுகல் உண்டியல் நத்தம்படம் 7
நாட்டான் கொட்டாய் 4 மனைவியர். அப்போதய சமுக நிலையில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டது என்பது இதன் மூலம் அறியலாம் .படம் -8
11 ஆம் நூற்றாண்டு குந்தப்பள்ளி நடுகல் புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. (வேப்பனப்பள்ளி )
படம் -9
படம் -10
இசை கலைஞர்கள் நடுகல் அருங்காட்சியகம்
இசை கலைஞர்கள் நடுகல் காவேரிப்பட்டிணம்
இவைகள் செறிந்த மக்கள் வாழ்ந்த மாவட்டம் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது அதுமட்டுமில்லாமல் இது எல்லைப் பகுதியில் இருப்பதால் அதிகமாக போர் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது என்பதும்
ஒருகாலத்தில் குத்துக்கல் காணப்படாத
மாவட்டமாக கருதப்படடது வியப்பளிக்கும் வண்ணம் மிகப்பெரிய குத்துக்கல் மற்றும் பல்வேறு
இடங்கலில் குத்துக்கல் கண்டறிப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது . அதில் சிலவற்றினை பார்ப்போம்
.
.2000 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் சாமந்த மலை கிருஷ்ணரி ஒன்றியம் குத்துக்கல் மற்றும் நெடுங்கல் என அழைக்கப்படும் இவை பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இவைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும் .இவைகள் சில இன்னும் வழிபாட்டில் இருக்கின்றன
குட்டப்பள்ளி குத்துக்கல் 1
குட்டப்பள்ளி குத்துக்கல் 2
ஜெகதாப் குத்துககல்
சஜ்சலப்பள்ளி குத்துககல் - (தாசரிப்பள்ளி) கிருஷ்ணகிரி
நலகுண்டலப்பள்ளி கற்குவை
நலகுண்டலப்பள்ளியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி
அன்பழகன் மற்றும் பள்ளிமாணவர் திவாகர் ஆகியோர் அருகே உள்ள மலையுச்சியில் (பந்தல் பாறை) வித்யாசமாக கற்களைக் கொண்டு ஏதோ அமைத்துள்ளார்கள்
என்று கூறினார் அந்த இடத்தை குழு 3 கி.மீ தொலைவு நடந்து சென்று ஆய்வுசெய்த பின்பு அருங்காட்சியக
காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் அவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகளை விளக்கும் பெருங்கற்கால நினைவு
சின்னங்கலென உறுதி படுத்தினார்.
பெருங்கற்கால கற்குவை வட்டவடிவில் இரண்டும், சதுரவடிவில் இரண்டும் எண்கோணவடிவில் ஒன்றும் காணப்படுகிறது.
வட்டவடிவ கற்குவை ஆறு அடி உயரமும் பத்து அடி சுற்றளவும் கொண்டதாக காணப்படுகிறது. அக்காலத்தில்
இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் பல்வேறு வகையான நினைவு கட்டமைப்புகளில் கற்குவையும்
ஒன்று. கற்களை உடைக்க இப்போதுள்ளது போன்ற கருவிகள் இல்லாத காலத்தில் கிடைத்த மற்றும்
உடைந்த கற்களைக் கொண்டு சரியான அளவில் சதுர வடிவிலும் . எண்கோணவடிவிலும் (எட்டுபட்ட).
வட்டவடிவிலும் சிறப்பான முறையில் அமைத்துள்ளனர். இது போன்ற கற்குவைகள் பாலகுறி அருகே
உள்ள மலைகளிலும் சிதைந்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனகூறினார்
கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்
பி.கே.பெத்தனப்பள்ளி (பெரியகோட்டப்பள்ளி )கிருஷ்ணகிரி
பெத்ததாளாப்பள்ளி - இம்மலையில் 8 பகுதிகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன -கிருஷ்ணகிரி ஒன்றியம்
ஆலப்பட்டி -நகக்கல்பட்டி ஶ்ரீராமன் மலை பாறை ஓவியமும் குகையும்
கிருஷ்ணகிரி அணைக்கல்வட்டங்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
கல்வெட்டுகள் நமக்கு வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவர பேருதவியாககவும் , மறுக்கமுடியாத ஆதாரமாகவும் உள்ளன
400 வருடங்களுக்குமுன்னதாகும் செல்லபிள்யார்க்கு 2 கழனியும்
பேராயிரஉடையாருக்கு ஒரு கழனியும் தனமாக கொடுத்தததை இக்கல்வெட்டு கூறுகிறது
கி.பி 13ம் நூற்றாண்டு
வீர ராஜேந்திரனின் 8 வது ஆட்சியண்டில் அத்திமல்லன் பூர்வாதராயன் பேரில் இருந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு விரியூர் நாட்டில் கோமறு உடையார் என்ற கோயிலில் திருப்பணி பூசை முதலியவற்றை செய்ய பணம் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
நடுகல்லுடன் கூடிய கல்வெட்டு குட்டப்பள்ளி வேப்பனப்பள்ளி
சுமார் கி.பி 17 நூற்றாண்டு 350 ஆண்டுக்குமுன்
புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளி தலைவனின் உடன் சென்ற மெய்காப்பாளன் குதிரையுடன் இறந்த செய்தியையும் அவனுக்கு ஊர் மக்கள் தானம் கொடுத்ததை குறிக்கிறது.
கி.பி.1103 முதலாம் குலோத்துங்கள் காலத்தியது
: காவல் காப்பதில் வல்லவனான ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி கலந்தகமங்கலம் என்ற இடத்தில் நடந்த தொறுபூசலில் இறந்துள்ள நிகழ்வினை கூறுகிறது
சின்னகொத்தூர் சாலையோரம் உள்ள பெருமாள் கோயிலின் சிதைந்த பாகங்களில் ஒரு குமுதக பட்டையில் உள்ளது.
காலம்:கி.பி.13ம் நூற்றாண்டு
திரிபுவனமல்ல பூர்வதராயன் திருஅத்தியூர் பெருமாளுக்கு தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது.
மேலுமலை பஞ்சாத்திற்குட்பட்ட பி.ஜி துர்கம் பெருமாள் கோவில் மலையடிவரத்தில பெரிய பாறையில் உள்ள கல்வெட்டு 3 பகுதிகளாக வெட்டப்பட்டுள்ளது. நடுவில் சக்கரமும் இரண்டு பக்கமும் கண்டபேருண்டம் மற்றும் புலியின் உருவங்கள் உள்ளன.
கி.பி.1423 விஜய நகர அரசர் மன்னன் விஜயராய உடையார் காலத்தியது:பீமாண்டபள்ளி ஊரின் கிழக்கு பக்கமுள்ள மாரியம்மன்கோவில் எதிரே உள்ளது
நாகேய நாயக்கர் ஆட்சி சிறக்கவேண்டி அவர் ஆட்சிக்கு உட்பட்ட 12 ஊர்களிலிருந்து காமிண்டர் முதலானவர் கூடி வம்மனவாவி என்ற மலையில் திருவேங்கடப்பரை ப்ரதிஷ்டை செய்து திருக்கலியாணம் செய்து பூசைக்காக நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கிருஷ்ணகிரி ஒரு எப்போதுமே வரலாற்று
முக்கியத்துவம் பெற்ற இடமாக இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன
அந்த வகையில் தற்போது உள்ளது போலவே வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளதற்கான
ஒரு வரலாற்று சான்று கிருஷ்ணகிரி மாவட்டம்
வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தள்ளது தற்போது போலவே அக்காலத்திலும் கிருஷ்ணகிரி
முக்கிய வணிகபாதையாக இருந்துள்ளதற்காக ஆதாரங்கள் கிடைத்தவாறு உள்ளன அவ்வகையில் கிருஷ்ணகிரி
மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயக்கனபள்ளி என்ற ஊரின் அருகே நாகமலைக்கு தெற்கு பகுதியில் (Latitude: 12.495487, 78.347874
. Longitude: 78.347874 . கிருஷ்ணகிரி வரலாற்று
ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டது
அப்போது குழுவின் வழிகாட்டி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அங்குள்ள பாறையில்
ஒரு யாணைமேல் ஓர் வீரன் அமர்ந்தமாறு உள்ள பாறை செதுக்கலை காண்பித்தார். அதில் இரண்டு
யானைகள் காணப்படுகின்றது. இதில் மேலுள்ள யானை வேகமாக ஓடுவது போல் கால் அமைப்பும் வேகமாக
ஓடும் போது வால் மேல்பக்கமாக நிமிர்ந்து உள்ளது போல் அழகாக காட்டப்பட்டுள்ளது. யானையின்
தந்தங்களும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது ஓடும் போது துதிகையின் முன் பகுதி சுருட்டி
வைத்துள்ளது அந்த யானை . அதன் மேல் அத்திகோசத்தார் எனும் வணிகர் படைக்குழுவின் தலைவர் வேல் அல்லது ஈட்டி வைத்துக் கொண்டு ஒரு பெரு வணிக வழியை பாதுகாக்கும்
வகையில் இருந்ததை குறிக்கும் வகையில் இது அமைந்திருக்கலாம் . இந்த இடத்தில் வணிகர்கள்
தங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இந்த அத்திகோசத்தார் தலைமையிலான படைகள்
இருந்துள்ளதை இது காட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை இந்த ஒரு இடத்தில்
தான் காணப்பட்டுள்ளது. இங்கு வணிகர்கள் பயணம் செய்ததையும் வணிக சந்தை இருந்ததையும் உறுதி செய்கிறது. வரலாற்றில் தென்னிந்திய வணிகர்கள் தங்களுக்கெனப் படை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். அகநானூறு 89 ஆம் பாடல் வணிகர்களுடன் சென்ற வீரர்களைப் பற்றிக் கூறுகிறது. ஆறலைக் கள்வர்கள் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வணிகர்கள் தங்களுக்கெனப் படை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அத்திகோசத்தார் வியாபாரிகள் வைத்திருந்த படைப்பிரிவினர் ஆவர். மேலும் அத்திகோசத்தார் பற்றிய செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் பெருவழி ஓரத்திலேயே கிடைக்கின்றன. இவர்கள் பெருவழிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். பெருவழிகளில் உள்ள இப்படைவீரர்கள் வாணிகத்திற்கென வரும் , வந்து தங்கியிருக்கும் வணிகர்களிடம் சுங்கம் வாங்கவும், வணிகர்களையும், வணிகப்பொருள்களையும் பாதுகாக்கவும் செய்தனர். மேலும், அத்திகோசத்தாரிடம், அரசனால் தானங்களைச் செயற்படுத்தும் அல்லது பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்திகோசத்தரின் உருவம் மிகவும் அரிதானது. தமிழகத்திலே இது வரை 4 வரை கண்டறிந்து
இருக்கலாம்.
அதேப்போல் தொல்காப்பியம் நுதலியபொருள் இவ்வியலில் 52 ஆம் பக்கத்தில், அத்திகோசத்தார் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிகழ்வில் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன்
அரசு ஓட்டுனர் மற்றும் கோவிந்தராஜ் அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார்.
ஆய்வுக்குழுவின் விஜயகுமார் , ரவி, மதிவாணன் , தமிழ்செல்வன் , ஆகியோர் இந்த ஆய்வு நிகழ்வில்
கலந்து கொண்டணர்
சின்னகொத்துர்
அங்குசகிரி சங்ககால நிலை ஆய்வு
Comments
Post a Comment