இது நடுகல் மாவட்டம் தமிழகத்திலேயே மிக அதிக நடுகற்களை கொண்ட ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி கண்டிப்பாக இருக்கும்.நடுகற்களின் வரலாறு நெடியது அந்த வகையில் நாடுகளின் வகைகள் நடுகற்களில் அத்தனை வகைகளும் கிருஷ்ணகிரியில் உண்டு ஆயிரம் ஆண்டு முதல் 250 ஆண்டுகள் வரையிலான நடுகற்கள் நம்முடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகின்றன. நமது மாவட்டத்தின் வீரம் . கலை பண்பாடு , வாழ்வியல் முறைகள் ஆகியவற்றினை நமக்கு சொல்கின்றன . இதில் கல்வெட்டுடன் கூடிய நடுகற்களும் உண்டு அவை அப்பகுதியை ஆண்டவர்கள் மற்றும் நடுகல் பற்றிய விவரங்களை கூறும் இடம் - ராமநாயனப்பள்ளி வட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி வகை - புலிகுத்திப்பட்டானகல் காலம் - 15 ஆம் நூற்றாண்டு விளக்கம் இது ஆநிரை காத்திலிலோ அல்லது ஊர் காத்தலிலோ புலியோடு போராடி புலியை கொன்று தானும் இறந்...